ஆய்வுப் பணியின் நிமித்தம், தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி றமீஸ், இங்கிலாந்து பயணம்

🕔 August 17, 2019

– எம்.வை. அமீர்-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தனது சமூக ஆய்வு விடயமாக நாளை ஞாயிற்றுக்கிழமை  இங்கிலாந்து பயணமாகிறார்.

இங்கிலாந்து நெபியார் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆய்வு போட்டி நிதியை வென்றதன் மூலம் ‘கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சமூக பொருளாதார வலுவூட்டல்’ என்ற சமூக ஆய்வை, இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரோடு சேர்ந்து தற்போது இவர் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஓர் அங்கமாகவே ஒரு வார காலத்தைக் கொண்டதாக இந்தப்பயணம் அமைகிறது.

இப்பல்கலைக்கழக ஆய்வு நிதியை பெற்றுக்கொண்ட, மூன்று இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நூல்கள், ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ள கலாநிதி றமீஸ், சிறந்த சமூக செயற்பாட்டாளருமாவார். 

தெ.கி.பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் கற்று றமீஸ், அப்பீடத்துக்கே பீடாதிபதியாகி அண்மையில் வரலாற்று சாதனை படைத்திருந்தார்.

இவர், சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்டவராவராவர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்