இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை

🕔 August 15, 2019

– அஹமட் –

றக்காமம் பிரதேச சபையின் கூட்ட அமர்வுகளுக்கு செய்தி சேகரிக்கும் பொருட்டு, ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் அமர்வதற்குரிய ஒழுங்குகளும் அங்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பங்கேற்கும் சபைக் கூட்டங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதை, வெளியுலகுக்குத் தெரியப்படுத்துதல் அவசியமாகும். வாக்களித்த மக்களும் அதனையே எதிர்பார்கின்றனர்.

இதுகுறித்து, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளரும், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான கே.எல். சமீம் தெரிவிக்கையில்; “இறக்காமம் பிரதேச சபையினர் தமது கூட்ட அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்களை அழைக்காமல் விடுவதனூடாக, மக்களின் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைக்கு எதிராகச் செயற்படுகின்றனர்” என்றார்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் இறக்காமல் பிரதேச சபையின் செயலாளர் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments