கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை ரத்தாகவில்லையா: அமெரிக்கா வெளியிட்ட பட்டியலால் குழப்பம்

🕔 August 15, 2019

மெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை.

2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (மார்ச் 01 தொடக்கம், ஜூன் 30 வரை) அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலை, அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உத்தியோகபூர்வமாக நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நபரொருவர் இலங்கைத் தேர்தலொன்றில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிகாவில் கோட்டாபய ராஜபக்ஷ பெற்றிருந்த குடியுரிமையை, அவர் ரத்துச் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையிலேயே, மேற்படி புதிய பட்டியலிலும் அவர் பெயர் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்