பாடசாலை ஆரம்ப நேரத்துக்கு மாறும் அமைச்சரவைக் கூட்டம்

🕔 July 30, 2019

மைச்சரவைக் கூட்டத்தை இன்று முதல் நேரகாலத்துடன் நடத்துவதற்கு ஜனாதிபதி தீரமானம் மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில், இதுவரை ஒவ்வொரு செவ்வாய்கிழமை தோறும் முற்பகல் 9.30 க்கு இடம்பெற்று வந்த அமைச்சரவை கூட்டத்தை முற்பகல் 7.30 க்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடக்கம் இந்த நேர மாற்றம் அமுல்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது.

இனி மாணவர்கள் காலை 7.30 மணிக்குள் பாடசாலைக்கு வந்து விட வேண்டியுள்ளமை போல், அமைச்சர்களும் காலையிலேயே நேரகாலத்துடன் அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஆஜராக வேண்டியுள்ளது.

Comments