கடமையை பொறுப்பேற்றார், பிரதியமைச்சர் மஹ்ரூப்

🕔 July 30, 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று செவ்வாய்க் கிழமை தனது கடமையினை பிரதியமைச்சர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் போது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி கே.என். குமாரி சோமரத்ன, மேலதிக செயலாளர் நிருவாகம் திருமதி. ஹேரத், துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவா விதாரண உப்பட பிரதியமைச்சரின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

ஈஸ்டர் தாக்குதலினால் எழுந்த நெருக்கடியை அடுத்து, முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர்.

இதன் பின்னர், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கு அமைவாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் தமது பதவிகளை ஏற்றனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் நான்கு பேர் பதவியேற்றனர்.

தொடர்பான செய்தி: றிசாட், ஹக்கீம் உட்பட நால்வர் அமைச்சுப் பதவியேற்பு; பைசல், ஹரீஸ், அலிசாஹிர் பொறுப்பேற்கவில்லை

Comments