அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க, ஜனாதிபதியின் இல்லத்தில் முஸ்லிம் எம்.பி.கள் கூடியுள்ளனர்: ஹரீஸ் மட்டும் வரவில்லை

🕔 July 29, 2019

– அஹமட் –

தவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் தமது பதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

இதன்பொருட்டு, தற்போது அவர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருகை தந்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது.

எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் மட்டும், அங்கு வருகை தரவில்லை எனவும் தெரியவருகிறது.

தனது ராஜாங்க அமைச்சர் பதவியினை ஹரீஸ் ராஜிநாமா செய்திருந்தார்.

இன்னும் சற்று நேரத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கவுள்ளனர்.

Comments