அடிப்படை வசதிகளற்ற சிறாஜ் நகர் வாசிகசாலை; அதிகாரிகளே கவனியுங்கள்

🕔 July 28, 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகரில் காணப்படும் வாசிகசாலை, அடிப்படை வசதியின்றி இயங்கி வருவதாக வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போதைய வாசிகசாலைக் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த வாசிக சாலையில் ஒரேயொரு ஊழியரே பணியாற்றி வருகிறார். மின்சாரம், மலசலகூடம் என அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

நாளாந்தம் பாடசாலை மாணவர்கள், வாசகர்கள் என பலரும் வருகிகின்றனர்.

மேலும் பாடசாலை மாணவ மாணவிகளுக்கான நூல் வசதிகளும் இங்கு இல்லை.

எனவே இது விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி குறைபாடுகளை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்குமாறு வாசகர்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

Comments