ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் இல்லை: அகிலவிராஜ்

🕔 July 22, 2019

னாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்குத் தீர்வு காண, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே ஒரே வழியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றிப் பேசுவது அர்த்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரும்; மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கே தமது கட்சி ஆதரவளிப்பதாக, ஆங்கில ஊடகமொன்றுக்கு தெவித்துள்ளார்.

Comments