கோட்டா வேட்பாளரென நான் கூறவிலலை: மஹிந்த

🕔 July 22, 2019

கோட்டாபய ராஜபக்‌ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

“நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிக்கின்றார்” எனவும்அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டிலிருந்து இன்னும் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை என, சரத் பொன்சேகா மாத்திரமே கூறியுள்ளதாகவும் மஹிந்த தெரிவித்தார்.

Comments