ஐ.தே.க. கூட்டணிக்கான ஒப்பந்தம், ஓகஸ்ட் 05 இல் கைச்சாத்து: அமைச்சர் அகில

🕔 July 21, 2019

க்கிய தேசியக் கட்சி, பரந்தளவிலான கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் ஓகஸ்ட் 05ஆம் திகதி இந்தக் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து, இந்தக் கூட்டணி அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சி சார்பாக பொது வேட்பாளரே களமிறக்கப்படுவார் எனவும் அமைச்சர் காரியவசம் கூறியுள்ளார்.

பொது வேட்பாளர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்