டொக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் பெண்கள் எவரும், பரிசோதனைக்கு வரவில்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

🕔 July 19, 2019

டுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் குருணாகல் வைத்தியர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் தாய்மார்கள் எவரும் தேவையான பரிசோதனையை செய்து கொள்வதற்கு இதுவரை முன்வரவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் டி சொய்சா மகளிர் வைத்திசாலைகளில் மேற்படி பெண்களுக்கு பரிசோதனை செய்வதற்கான தயார் நிலைகள் இருந்தும், இதுவரை எவரும் அதற்கு முன்வரவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இந்த பரிசோதனைக்கு நீண்ட நாட்கள் எடுக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க கூறினார். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பக்கச்சார்பாக இருப்பதாகவும், அவரின் பரிசோதனைகளில் நியாயம் கிடைக்கும் என்பதில் மக்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்