கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பாதுகாப்பு பணியாளர்கள் அட்டகாசம்: ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்

🕔 July 16, 2019

ல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்விட வரும் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் செய்திகளை சேகரித்த ஊடகவியலாளர் பாறூக் ஷிஹான், அங்குள்ள பாதுகாப்பு பணியாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளதோடு, பொலிஸ் நிலையத்திலும் ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை நேற்று முன்தினம் பார்வையிட வந்தோர், வைத்தியசாலையினுள் அனுமதிக்கப்படாமல், மிக நீண்ட நேரம் வௌியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் நோயாளிகளைக் காண வந்தோர் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த பாதுகாப்பு பணியாளர்கள், நோயாளிகளைக் காண வந்தோரை தூஷண வார்த்தைகளால் ஏசியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரங்களை செய்திகளுக்காக படமெடுத்த ஊடகவியலாளர் பாறூக் ஷிஹான் உள்ளிட்டோரையும், இதன்போது வைத்தியசாலைப் பணியாளர்கள் அச்சுறுத்தியுள்ளதோடு, கீழ்தரமான வார்த்தைகளாலும் பேசியுள்ளளர்.

மட்டுமன்றி, தமது கடமைகளை செய்வதற்கு ஊடகவியாலாளர்கள் தடை ஏற்படுத்தியதாகத் தெரிவித்து, கல்முனை பொலிஸ் நிலையத்தில், வைத்தியசாலை பாதுகாப்புப் பணியாளர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து ஊடகவியலாளர் பாறூக் ஷிஹான் உள்ளிட்ட மூவரை, கல்முனை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை அழைத்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதன்போது, சம்பவ நேரத்தில் ஊடகவியலாளர்கள் எடுத்த வீடியோக்களை பொலிஸாருக்கு காண்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஊடகவியலாளர்கள் தொடர்பில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பாதுகாப்பு பணியாளர்கள், இவ்வாறு மோசமாக நடந்து கொண்டமை குறித்து, அந்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியமை அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்