ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மூன்று கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணி உதயம்

🕔 July 11, 2019

– க. கிஷாந்தன்

மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியொன்றினை உருவாக்கியுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ. கதிர் ஆகியோர் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைந்து இந்த கூட்டணியை அமைத்துள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை இந்த கூட்டணியின் அங்குராப்பண நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களை தவிர்ந்த ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தேசிய கூட்டணி அங்குராப்பணம் செய்யப்பட்டது.

இ.தொ.கா. பொது செயலாளர் அனுஷா சிவராஜா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ. கதிர், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் சுரேஷ் கங்காதரன் ஆகியோர் மேற்படி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்