பதவி உயர்வு பெற்றுச் செல்லும் படைப் பிரிவு தளபதிக்கு, அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் கௌரவமளிப்பு

🕔 July 11, 2019

– எம்.வை. அமீர் –

24 ஆவது படைப் பிரிவின் அம்பாறை மாவட்ட தளபதி மகிந்த முதலிகே பதவி உயர்வு பெற்று செல்வதையிட்டு, அவரை அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் கௌரவித்தது.

அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையிலான குழுவினர், மஹிந்த முதலிகேயினை சந்தித்து தமது கௌவரத்தினை வழங்கினர்.

அம்பாறை மாவட்டத்தில் இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்மேற்கொண்ட மஹிந்த முதலிகேயினை பாராட்டிய மேற்கடி குழுவினர், அவருக்கு பொன்னாடை போர்த்தி ஞாபக சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தனர்.

இதன்போது சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல்.அன்வர்டீன், சம்மாந்துறை மஜ்லிஸ் சூராவின் தலைவர் ஐ.ஏ. ஜப்பார் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல். ஹனீஸ் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Comments