ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்ற ஹிஸ்புல்லா, ஆசிப் கைது

🕔 July 9, 2019

ஹ்ரானுடன் பயிற்சி பெற்றார் எனச் சந்தேகிக்கப்படும் எஸ்.எச். ஹிஸ்புல்லா எனும் நபர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவர் ஹம்பாந்தோட்ட பகுதியில் ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்றார் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்றதாகச் சந்தேகிக்கப்படும், எம்.எம். ஆசிப் எனும் 29 வயதுடைய நபர் ஒருவரை, பேராதெனிய பிரதேசத்தில் வைத்து, பங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments