5ஜி கம்பங்களுக்கு எதிராக, யாழ்ப்பாண முஸ்லிம்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை

🕔 July 9, 2019

– பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இன்று செவ்வாய்கிழமை முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.

இனறு செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் மாநகரசபையினால் ஐந்து சந்திப்பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்றுமாறு கோரியே, இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“யாழ்ப்பாணம் மாநகரசபையினர் மின்கம்பங்களை பொருத்துவதாக பொய்யுரைத்து கதிா்வீச்சு கூடிய 5G தொழிநுட்ப கம்பங்களை நாட்டுகின்றனர்.

மனித உயிா்கொல்லும் அந்தக் கம்பங்கள் எமக்கு தேவையில்லை” என்று, கவன ஈர்ப்பில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

உயிரினங்களுக்கு ஆபத்தான 5G கோபுரத்தை எதிர்ப்போம், வேண்டாம் வேண்டாம் 5G டவர் வேண்டாம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை, கவன ஈர்ப்பில் ஈடுபட்டோர் தாக்கியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்