33 ஆயிரம் சிசேரியன் சத்திர சிகிச்சை தொடர்பில் ஆராய, குருணாகல் வைத்தியசாலை தீர்மானம்

🕔 June 19, 2019

குருநாகல் போதனா வைத்தியசாலையில், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சத்திரசிகிச்சைகள் தொடர்பில் ஆராய, வைத்தியசாலை நிர்வாகப் பிரிவு தீர்மானித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் 33,000 பேர் சிசேரியன் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சிசேரியன் சிகிச்சையின் பின்னர் தாய்மார் குழந்தைப் பாக்கியத்தை இழந்துள்ளனரா என்பது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த, மகப்பேற்று வைத்தியர் ஷாபி மேற்கொண்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக, குருநாகல் வைத்தியசாலையில் 1,000 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்