இலங்கைக்கு சஊதி, இம்முறையும் 150 மெற்றிக் தொன் ஈச்சம்பழம் அன்பளிப்பு

🕔 June 18, 2019

– அஸ்ரப் ஏ சமத் –

ஊதி   அரசாங்கம் வருடா வருடம் இலங்கைக்கு வழங்கி வரும் 150 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களை, சம்பிரதாயபூர்வாமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று  செவ்வாய்கிழமை கொழும்பில் உள்ள சஊதி அரேபியா நாட்டின் துாதுவா் அலுவலகத்தில்இடம்பெற்றது.

இதன்போது தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளா் திருமதி எம்.எஸ். முகம்மதிடம், சஊதி அரேபியாவின் துாதுவா் அப்துல் நஸாா் பின் குஸ்னி அல் கரத்தி, பேரீச்சம் பழங்களை கையளித்தாா்.

கடந்த 2 மாதகாலமாக நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரமாக, இந் நிகழ்வு பிற்போடப்பட்டிருந்தது.

இதன்போது, அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம். முகைஸ், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் மற்றும் சவுதி அரசா்  சல்மான் மனிதபிமான உதவித்திட்டத்தின்  நிதிப் பணிப்பாளா் மகுமூத் குரைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்