அரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

🕔 June 17, 2019

– அஹமட் –

அரச பணியாளர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் குறித்து, பொது நிருவாக அமைச்சு அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையின் காரணமாக, பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதகுருமாரே அதிகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் படி, அரச பணி செய்யும் முஸ்லிம் பெண்கள் கடமை நேரத்தில் அபாயா அணிய முடியாத நிலைவரம் உருவாகியுள்ளதாக, கவலை வெளியிடப்பட்டுள்ள போதும், முஸ்லிம்களை விடவும் பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்களே அதிகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையில், ஆண் ஊழியர்கள் பணிநேரத்தில் காற்சட்டை மற்றும் மேற் சட்டை அல்லது தேசிய உடை அணிய வேண்டுமென்றும், பெண் ஊழியர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒசரி) அணிய வேண்டுமெனவும் குறித்த சுற்றறிக்கை மூலம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரச உத்தியோகத்தர் அணிய வேண்டிய ஆடை தொடர்பிலான மேற்பட்டி சுற்றறிக்கையானது, அரச உத்தியோகத்தர்களாகக் கடமை புரியும் பௌத்த ஆண், பெண் மதகுருமாருக்கும், கிறிஸ்துவ ஆண், பெண் மதகுருமாருக்கும் அவர்களின் மத, கலாசார ஆடைகளை அணிய முடியாதவாறும் தடையினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்