கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்

🕔 June 17, 2019

– பாறுக் ஷிஹான் –

ல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழைமை காலை தொடக்கம், சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ ஸ்ரீ க.கு. சச்சிதானந்த சிவம் குருக்கள்,  கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அளகக்கோன் விஜயரெட்னம், சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் இந்த உண்ணா விரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வரை, தமது உண்ணாவிரதம் தொடரும் என, இவர்கள் அறிவித்துள்ளனர்.

இவர்களுடன் சமூக அமைப்புக்கள், கல்முனை வாழ் தமிழ் இளைஞர்களும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்