அறபு இந்த நாட்டின் மொழியல்ல, அதனை தனிப்பட்ட பாவனைக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்: அமைச்சர் மனோ

🕔 June 15, 2019

றபு மொழி நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கின்றது. அறபு மொழி இந்த நாட்டின் மொழியல்ல. நாட்டில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு மொழியை பகிரங்கமாகப் பயன்படுத்தும் போது, அது சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தும் என்று, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கு கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

இஸ்லாமிய பள்ளிவாசல்களிலே அறபு மொழியைப் பயன்படுத்துவதில் பிரச்சினை கிடையாது.

ஆனால் நாட்டில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு மொழியை பகிரங்கமாகப் பயன்படுத்தும் போது, அது சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தும். அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் எண்ணப்பாடுகளையும் அதிகரிக்கின்றது.

மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வந்து வீரக் கதைகள் பேசும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அறபு மொழிப் பாவனையை நீங்கள் உங்கள் தனிப்பட்ட பாவனைக்கு வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பொது இடங்களில் பயன்படுத்த வரக் கூடாது என்று கேள்டுக் கொள்ள விரும்புகிறேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்