மினுவாங்கொட வன்முறை; மதுமாதவ அரவிந்தவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை: சட்டமா அதிபர் தெரிவிப்பு

🕔 June 13, 2019

மினுவாங்கொட பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக, மது மாதவ அரவிந்தவிவை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று, உச்ச நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

பிவித்ரு ஹெல உறுமய கட்சியின் உப தலைவரான மதுமாதவ அரவிந்த, கடந்த மாதம் மினுவாங்கொட பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வரை, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், தன்னை பொலிஸார் கைது செய்வதற்கு தடைவிதிக்கக் கோரும் மனுவொன்றினை, உச்ச நீதிமன்றில் மதுமாதவ அரவிந்த தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், அந்த மனு தொடர்பான விசாரணை இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, மதுமாதவ அரவிந்தவிவை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று, சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்