பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 October 9, 2015

Hakeem - Ratnapura - 01
– ஷபீக் ஹுசைன் –

ரத்தினபுரி மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலுக்கு சொந்தமான பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், கடைத் தொகுதிகள் அமைக்கும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

மேற்படி பள்ளிவாசலுக்குச் சொந்தமான பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், கடைத்தொகுதிகளை – இரத்தினைபுரி மாநகரசபை அமைக்கவுள்ளதாகவும், இதனால் பள்ளிவாசலுக்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும், அமைச்சர் ஹக்கீமிடம் பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், இன்று வெள்ளிக்கிழமை மாலை இரத்தினபுரி மஸ்ஜிதுல் ஜன்னா பாள்ளிவாசலுக்கு சென்று கலந்துரையாடியபோதே, பள்ளிவாசல் நிருவாகத்தினர் இதனைத் தெரிவித்தனர்.

பள்ளிவாசலுக்குச் சொந்தமான பிரதான நுழைவாயிலுக்கு முன்னாள் உள்ள குறித்த காணி, சில வருடங்களுக்கு முன்பு, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்டு இரத்தினபுரி மாநகர சபைக்கு சொந்தமான சந்தை வாகன தரிப்பிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது இந்த இடத்தில் கடைத்தொகுதியினை அமைப்பதற்கு இரத்தினபுரி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன்போது அமைச்சர் ஹக்கீமிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறு பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் கடைத்தொகுதி அமைத்தால், பள்ளிவாசலுக்குள் வாகங்கள் பிரவேசிக்க முடியாது என்றும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

எதிர்வரும் ஒரு சில தினங்களுக்குள் இந்தக் காணியில் கடைத்தொகுதி அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், கடைத்தொகுதி அமைப்பதை தடுத்து நிறுத்துமாறும் பள்ளிவாசல் நிர்வாகிகள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து, நகர அபிவிருத்தி அதிகார சபையின்அதிகாரியொருவரிடம் அமைச்சர் ஹக்கீம், இது தொடர்பாக தெலைபேசியில் பேசினார்.

மேலும், இக்கடை தொகுதி அமைப்பதை நிறுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசுவதாகவும் அமைச்சர ஹக்கீம் குறிப்பிட்டார்.Hakeem - Ratnapura - 02Hakeem - Ratnapura - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்