ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை; மைத்திரியிடம் கையளிப்பு

🕔 June 10, 2019

ஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை, இன்று திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலலகொட இந்த அறிக்கையை கைளித்தார்.

மூவரடங்கிய இந்த விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் ஆகியோரும் இதன்​போது உடனிருந்துள்ளனர்.

இந்த விசாரணைக் குழுவின் இரண்டு இடைக்கால அறிக்கைகள் இதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments