ராஜிநாமா கடிதம் திங்கட்கிழமையே கொடுத்தாயிற்று: உறுதிப்படுத்தினார் ஹரீஸ்

🕔 June 6, 2019

– அஹமட் –

ங்கள் பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள், அதற்குரிய கடிதங்களை பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஜனாதிபதிக்கு முகவரியிட்டு முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் எழுதிய கடிதங்களை, பிரதமரிடம் திங்கட்கிழமையன்றே ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதிக்கு முகவரியிட்டு – தான் எழுதிய கடிதத்தின் பிரதியினை, முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, கடிதத்தை திங்கட்கிழமையே அனுப்பி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ராஜிநாமா செய்த அமைச்சர்களின் கடிதங்கள் இதுவரை ஜனாதிபதிக்கு கிடைக்கவில்லை என்று, ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைச்சர்களுக்கான வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மீள ஒப்படைப்பதற்கு சில செயன்முறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளதால், அதற்கு சில நாட்கள் தேவைப்படும் என, முன்னாள் அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் ஒருவர் கூறினார்.

தொடர்பான செய்தி: முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமா; ஜனாதிபதிக்கு கடிதம் கிடைக்கவில்லையாம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்