பதவி துறந்து விட்டோம்: ஹக்கீம் அறிவிப்பு

🕔 June 3, 2019

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை கூட்டாக ராஜிநாமா செய்துள்ளதாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் பிரதமருடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடியும் வரை தாங்கள் பதவியில் இருக்க விரும்பவில்லை என குறிப்பிட்டார்.

முஸ்லிம் அமைச்சர்கள், ராஜங்க அமைச்சர்கள் மற்றம் பிரதியமைச்சர்கள் அனைவரும் இணைந்து கூட்டாக ராஜிநாமா செய்துள்மை குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடக சந்திப்பில், 15 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

எவ்வாறாயினும், பதவி துறந்த அனைவரும் தொடர்ந்தும் அரசாங்கத்துடனேயே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்