பேஸ்புக்கில் இனவாதம் பரப்பிய நீதிபதியின் பதவி இடைநிறுத்தம்

🕔 May 30, 2019

ம்பிலிபிட்டிய மாவட்ட நீதிபதி தினேஷ் லக்மால் பெரேரா – பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

பேஸ்புக் இல் இனமொன்றுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டு தொடர்பில், அவரின் பதவி இடை நிறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை, நீதிச் சேவை ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக் ஊடாக இன நல்லுறவை பாதிக்கும் வகையில் கருத்துக்களை பரிமாறியமை தொடர்பில், குறித்த மாவட்ட நீதிபதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே,  நீதிச் சேவை ஆணைக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

இந் நிலையில் பதவி இடை நிறுத்தம் செய்ய முன்னர், குறித்த மாவட்ட நீதிபதியிடம் நீதிச் சேவை ஆணைக் குழு – விளக்கம் கோரியதாகவும், சமூக வலைத்தளத்தில் இனவாத கருத்துக்களை தான் பகிரவில்லை என அவர் விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையிலேயே விசாரணைகளுக்காக அவர் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்