ராணுவத்தினரின் ஏற்பாட்டில், பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க இப்தார்

🕔 May 30, 2019

– முன்ஸிப் அஹமட் –

ன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ராணுவத்தினர் ஒழுங்கு செய்த இப்தார் நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை பொத்துவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

கோமாரி – பொத்துவில் படைமுகாமின் ராணுவக் கட்டளைத் தளபதி பிடிகேடியர் தமித் ரணசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட ராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின்போது ராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பரஸபர கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத் தலைவர் ஏ.எம். ஜௌபர், இந்த நிழக்வுக்கான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தார்.

பொத்துவில் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் ஏ.ஏம். சித்தீக், ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ. ஆதம்லெப்பை, பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். வாசித், பிரதேச செயலாளர் ஆர். திவ்வியராஜா, விசேட அதிரடிப் படையின் உதவி அத்தியட்சகர் உபுல் ஜயவர்த்தன மற்றும் கடற்படை அதிகாரி ரஞ்சித் திஸாநாயக்க உட்பட உலமாக்கள், சிவில் சமூகப் பிரிதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்