தைக்கா நகர் மத நிறுவனம் தொடர்பான செய்தி; குற்றச்சாட்டு தவறு: நிர்வாகத்தினர் விளக்கம்

🕔 May 27, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை – தைக்கா நகர் பகுதியிலுள்ள மத நிறுவனமொன்று தொடர்பாக ‘புதிது’ செய்தித்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், அந்த மத நிறுவனத்தின் நிர்வாகத்தினர் பூரண விளக்கம் ஒன்றினை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு வழங்கியுள்ளனர்.

மேலும், அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தனர்.

குறித்த மத நிறுவனத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கிய நிதியிலிருந்து, சில அபிவிருத்தி வேலைகளைச் செய்யாமல், பழைய வேலைகளை புதிதாக செய்தது எனக் காட்டி, அதற்கான பணத்தை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திடம் பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்தாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்த முறைப்பாடு ஒன்றினை நாம் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

எவ்வாறாயினும், இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது என்று தெரிவித்த மத நிறுவனத்தின் நிர்வாகத்தினர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் தமக்கு வழங்கிய அனுமதிக்கிணங்க புதிதாகவே வேலைகளைச் செய்தமைக்கான ஆதரங்களையும் ‘புதிது’ செய்தித்தளத்திடம் காண்பித்தனர்.

மேலும், செய்தியில் தெரிவிக்கப்பட்டமை போல், குறித்த மத நிறுவனத்தின் கட்டடத்துக்கு அலுமினியம் பொருத்தியமைக்கான பணத்தை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திடம் தாம் இதுவரை கோரவில்லை எனவும் அவர்கள் கூறினர்.

தொடர்பான செய்தி: செய்யாத வேலைக்கு பணம் பெற முயற்சிக்கும் மத நிறுவனம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துணை போவதாக குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்