இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிலை: கிடைக்க வேண்டியது 80, கிடைத்திருப்பது 24: வை.எஸ்.எஸ். ஹமீட் கவலை

🕔 May 24, 2019

ந்தியாவிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டால்தான் முஸ்லிம்களுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் கிடைக்கும் என்று, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 15 வீதமாக வாழும் முஸ்லிம்களுக்கு, 24 நாடாளுமன்ற உறுப்பினர்களே, தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் கிடைக்கப் பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள ஹமீட், விகிதாரசார ரீதியாக அவர்களுக்கு 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கப் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் வை.எல். எஸ். ஹமீட் இது குறித்து தெரிவித்துள்ளதாவது;

இந்தியாவில் மொத்தம் 24 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதாக, இந்திய முஸ்லிம்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

இந்திய முஸ்லிம்களின் சனத்தொகை 172 மில்லியன். அதாவது இந்திய மொத்த சனத்தொகையில் இது சுமார் 15 வீதமாகும். தேர்தல் மூலம் இம்முறை 542 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். (545 உறுப்பினர்களில் இருவரை ஜனாதிபதி தேர்வு செய்வார். ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை)

இந்த நிலையில் ஆகக்குறைந்தது முஸ்லிம்களுக்கு 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கவேண்டும். ஆனால் தொகுதிமுறைத் தேர்தல் காரணமாக 24 ஆசனங்கள்தான் கிடைத்திருக்கின்றன. அதற்கே மகிழ்ச்சியடைகிறார்கள் அச்சகோதரர்கள்.

இதுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல் நிலை.

இந்தியாவிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டால்தான், அவர்களுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் கிடைக்கும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்