தாயாருடன் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் ஞானசார தேரர்

🕔 May 24, 2019

லகொடஅத்தே ஞானசார தேரரும் அவரின் தாயாரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை சந்தித்தனர் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தேரரின் தாயாருடன், ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக, 06 வருடங்களைக் கொண்ட கடூழிய சிறைத்தண்டனை ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 09 மாதங்கள் இந்தத் தண்டனையை அனுபவிக்கும் வகையில் வெலிக்கட சிறைச்சாலையில், ஞானசார தேரர் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினார்.

இதனடிப்படையில், நேற்றைய தினம் ஞானசார தேரர், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்