ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் காணிகளை இழந்தோருக்கு நஷ்டஈடு: பிரதியமைச்சர் மஹ்ரூப் வழங்கி வைத்தார்

🕔 May 20, 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

லுவில் துறைமுக நிர்மாணத்தின் போது காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைகளை, துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வு ஒலுவில் துறை முகத்திலுள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது.

பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் முயற்சியின் பலனாக
மிக நீண்ட காலத்தின் பின்னர் தமக்கு இந்த நஷ்ட ஈட்டுத் தொகை கிடைக்கப் பெற்றதாக இதன்போது பயனாளிகள் தெரிவித்தனர்.

காணிகளை இழந்த 20 பேருக்கு இந்த நஷ்ட ஈட்டுத் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டன.

சுமார் 34.4 மில்லியன் ரூபாவுக்கான காசோலைகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன .

குறித்த நிகழ்வில் சுகாதார ராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். நஸீர், எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, தவிசாளர் அமானுள்ளா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்