சஹ்ரானின் லட்டொப்பில் காணப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது

🕔 May 14, 2019

யங்கரவாதி சஹ்ரானின் லப்டொப் கணிணியில் இருந்த பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நுவரெலியாவில் சஹ்ரான் தங்கியிருந்த இடத்தில் மேற்படி கணிணி கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானோர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்தத இரண்டு வர்த்தகர்கள் பிபிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சஹ்ரானின் லப்டொப் கணிணியில் 60 பேரின் பெயர்கள் காணப்பட்டதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்