மினுவாங்கொட தாக்குதலில் ஈடுபட்ட 74 பேர் கைது

🕔 May 14, 2019

மினுவாக்கொடை பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் 74 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 33 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ‘ நவ சிங்ஹலே ‘ அமைப்பின் தலைவர் டேன் பிரியஸாத் என்பவரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு – வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம்மாற்றுமாறு கோரி, நேற்று வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இவர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்