சம்மாந்துறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். சீருடை உட்பட, வெடிபொருட்களை தயாரிக்கும் சாதனங்கள் மீட்பு

🕔 April 26, 2019

– அஹமட் –

சம்மாந்துறை பிரதேசத்தில் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் சீருடைகள் உள்ளிட்ட பெருமளவு பொருட்களை பாதுகாப்பு படையினர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர்.

சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டை காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர், வாடகைக்குப் பெற்றிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் கொடியும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் ஒரு லொறியின் அரைவாசியளவு பொருட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ன.

இதனுடன் தொடர்புபட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்