மே தினத்துக்கு முன்னர், மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானம்; முதலில் 04 பேர்

🕔 April 13, 2019

தூக்கு தண்டனையை மே முலாம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 04 பேர், முதலாவதாக தூக்கில் இடப்படவுள்ளனர்.

சித்திரைப் புதுவருடம் கழிந்து ஒரு சில வாரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்.

இதேவேளை, அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி இறுதிச் சுற்றுக்கு 30 பேர் தெரிவாகியுள்ளதாகவும், இவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளான பின்னர், இவர்களிலிருந்து இருவர் தெரிவு செய்யப்படுவர் எனவும், மேற்படி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களத்தின் தகவலின் படி 433 பேர், மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இவர்களில் 23 பேர், போதைப் பொருள் சம்பந்தமான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.

1226 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களில் 793 பேர், மேன்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments