‘எதுகை’ ‘மோனை’ தெரியாத எம்.பி

🕔 April 11, 2019

– அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் பதவியை தான் ராஜிநாமா செய்ததாக சில ஊடகங்கள் பொய்யான தகவலை வெளியிட்டு வருவதாகவும், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்ததாக, இன்று வியாழக்கிழமை ‘தினகரன்’ பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியுள்ளது.

‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர்  ராஜிநாமா’ செய்ததாக ‘புதிது’ செய்தித்தளம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்கு எதிர்வினையாகவே, நாடாளுமன்ற உறுப்பினர், இவ்வாறு கூறியுள்ளார்.

அமைப்பாளர் பதவிக்கும், மத்தியகுழு தலைவர் பதவிக்கும் இடையிலான வித்தியாசத்தை பகுத்தறிய முடியாதவராக நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் இருக்கின்றமை கவலைக்குரியதாகும்.

ஏற்கனவே, நாடாளுமன்ற உறுப்பினர் நசீருடைய ஊடகப் பிரிவின் பெயரில் வெளியிடப்பட்ட செய்திகளிலும், ‘புதிது’ வெளியிட்ட செய்தி போலியானது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் விலகியதாக, ‘புதிது’ செய்தித்தளமோ, அல்லது வேறு ஊடகங்களோ செய்திகள் எதனையும் வெளியிட்டிராத நிலையிலேயே, “அமைப்பாளர் பதவியை நான் ராஜிநாமா, செய்ததாக சில ஊடகங்கள் பொய்யான தகவலை வெளியிட்டு வருகின்றன” என்று, அவர் கூறியிருக்கின்றார்.

தன்னைப் பற்றி வெளிவருகின்ற செய்திகளை தான் வாசிக்காமல், பிறர் வாசித்து விட்டு வந்து சொல்லுகின்றவற்றினை கேட்டு, அதனை தனது பகுத்தறிவுக்கேற்றவாறு விளங்கிக் கொண்டு, அதற்கு மறுப்பறிக்கை விடுகின்ற நிலையிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் இனியாவது விலகிக் கொள்ள  வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினகரன் பத்திரிகையில் வெளியான செய்தி

தொடர்பான செய்திகள்: 

01) மு.காங்கிரசின் மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் எம்.பி. ராஜிநாமா: ஹக்கீமுடனான அதிருப்தியே காரணம்

02) ‘புதிது’ செய்தியை மு.காங்கிரசின் மத்திய குழு செயலாளர் உறுதி செய்தார்: நசீர் தரப்பினரின், மூடி மறைக்கும் முயற்சி தோல்வி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்