இலவச வை – பை தருவதாகக் கூறியவர்கள், மின்சாரம் வழங்குவதற்கே திண்டாடுகின்றனர்: நாமல் கிண்டல்

🕔 March 27, 2019

லவச வை – பை வழங்குவதாக வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம், மக்களுக்கு முறையாக மின்சாரத்தை வழங்க முடியாமல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்;
“இலவச வை – பை , மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு கார் என பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வந்த இந்த அரசாங்கம், மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கே திண்டாடி வருகிறது” என்றார்.

“நாட்டில் மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிகத்தமையே மின்வெட்டுக்கு பிரதான காராணம் என அமைச்சர் ரவி கருநானாயக்க கூறுகிறார். நாட்டில் வருடா வருடம் மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிப்பது என்பது சாதாரணமாக நடக்கும் ஒரு விடயம். அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்துக்குப் பின்னர், மின் உற்பத்தி செய்யும் எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை.

பல்வேறு தரப்பினர் முன்வைத்த சூரிய மின் சக்தி திட்ட யோசனைகளையும் இந்த அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளது.

திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக, மக்களை அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்