ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியல்ல: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

🕔 March 27, 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்துக் கொள்ளும் போது, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுவதற்கான சாத்தியத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நிராகரித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே, பொதுஜன பெரமுன சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இன்று புதன்கிழமை அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுன சார்பாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே களமிறக்கப்படவுள்ளதாக, கடந்த வாரம் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் யாப்பா, இந்த தகவலைக் கூறியுள்ளார்.

இன்றும் 07 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது, பொதுஜன பெரமுன கட்சியானது, தனது சொந்த வேட்பாளரையே களமிறக்கும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்