பொத்துவில், உஹன கல்வி வலயங்கள் புதிதாக உருவாகின்றன: ஆளுநர் ஹிஸ்புல்லா அங்கிகாரம்

🕔 March 26, 2019
பொத்துவில் மற்றும் உஹன ஆகிய கல்வி வலயங்களை புதிதாக உருவாக்குவதற்கான அங்கிகாரத்தை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வழங்கியுள்ளார்.
திறைசேரி மற்றும் கல்வி அமைச்சோடு கலந்துரையாடியதை அடுத்து அமைச்சரவை அங்கிகாரத்துடன், கிழக்கு மாகாணத்திலே புதிய கல்வி வலயங்களை உருவாக்கும் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலே புதிய இரண்டு கல்வி வலயங்களை உருவாக்க வேண்டும் என்று, நீண்ட நாட்களாக ஒரு கோரிக்கை இருந்து வருகின்றது. மிகவும் பின்தங்கிய, கஷ்டமான பொத்துவில் பிரதேசத்தினை அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இருந்து பிரித்து பொத்துவில் வலயமாகவும், உஹன பிரதேசத்தினை அம்பாறை கல்வி வலயத்தில் இருந்து பிரித்து உஹன கல்வி வலயமாகவும் உருவாக்க வேண்டும் என்பதே, மேற்படி கோரிக்கையாகும்.

இதனடிப்படையில் திறைசேரி மற்றும் கல்வி அமைச்சோடு ஆளுநர் ஹிஸ்புல்லா கலந்துரையாடியதை அடுத்து, அமைச்சரவை அங்கீகாரத்துடன் கிழக்கு மாகாணத்திலே புதிய கல்வி வலயங்களை உருவாக்கும் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

தற்போது கிழக்கு மாகாணத்திலே 17 கல்வி வலயங்கள் காணப்படுகின்றன. இவை ஆளுநரின் அங்கீகாரத்தோடு 19 ஆகவுள்ளன.

இதன் மூலம் கல்வியில் பின் தங்கிய பிரதேசங்களில் மாற்றத்தினை கொண்டு வர முடியும் என நம்பப்படுகிறது.

உஹன கல்வி வலயமானது எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி காலை 09 மணிக்கும்,பொத்துவில் கல்வி வலயமானது மே மாதம் 03ம் திகதி காலை 09 மணிக்கும் ஆளுநரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட இருக்கின்றது.

இக்கல்வி வலயங்களுக்கான ஆளனி உத்தியோகத்தர்களை உடனடியாக நியமிப்பதற்கும் மற்றும் அதற்கான கட்டடங்கள், தளபாடங்களை வழங்குமாறும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்