புத்தளம் பிரதேசத்தில் கோர விபத்து: வீதியில் நின்றிருந்தவர் உட்பட நால்வர் பலி

🕔 March 18, 2019

புத்தளம் – நாகவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். 07 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.45 அளவில் வேன் ஒன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களுள் 03 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியோரம் நின்றுக்கொண்டிருந்த ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments