டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை தோல்வி; உடன்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை

🕔 February 28, 2019

மெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஆகியோருக்கிடையில் வியட்நாமில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் பேச்சுவார்த்தையில், எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

ஹனோயில் நடந்த உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அணு ஆயுதத்தை முழுமையாக கைவிட வடகொரியா ஒப்புக்கொள்ளுமா என்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய விஷயமாக இருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு வியட்நாமில் நடைபெற்றது. இரண்டு நாள் நடக்கும் உச்சிமாநாட்டில் நேற்றைய தினம், கிம் ஜாங் உன் மற்றும் டிரம்ப் இரவு விருந்தில் சந்தித்து பேசினார்கள்.

இரண்டாவது தினமான இன்று வியாழக்கிழமை, இரு நாட்டு தலைவர்கள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், இரு தலைவர்களும் ஊடகவியலாளர்களை சந்திப்பர் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று நடந்தது என்ன?

புதன்கிழமை நடந்த சந்திப்பில் செய்தியாளர்கள் சுருக்கமான கேள்விகள் கேட்கவே அனுமதிக்கப்பட்டனர். மேலும் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்து பேசினார்கள்.

நேற்று இரவு விருந்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் கிம்மின் மூத்த ராஜிய தூதுவர் கிம் யாங் – சோல் உடனிருந்தனர்.

கிம்முடனான சந்திப்புக்கு பிறகு டிரம்ப் தனது ட்வீட்டில்; ‘வியட்நாமில் வடகொரியாவின் கிம் ஜாங் உன் உடனுனான இரவு விருந்தும் சந்திப்பும் அருமையாக இருந்தன . பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்றது’ என தெரிவித்திருந்தார்.

Comments