ஓமானில் நடந்த வாகன விபத்தில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும், இரு பிள்ளைகளும் பலி

🕔 February 23, 2019

– அஹமட் –

மானில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும்  இரண்டு பிள்ளைகளும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு பிள்ளையும் இறந்துள்ளதாக அறியமுடிகிறது.

இதன்போது வாகனத்தில் பயணித்த கணவரும் அவர்களின் மற்றொரு குழந்தையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமான் செய்திகள் தெரிவிக்கின்றன.

அல் ஜபல் அல் அஹ்தர் மலைப் பாதையில் பயணிக்கும் போது இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த சக்கி என்பவர் தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே, இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேற்படி சக்கி என்பவர் – அக்கரைப்பற்று மர்ஹூம் ஹாசீம் (பிரின்ஸ் கோர்னர்) என்பவரின் மகனும், பொலிஸ் பரிசோதகர் சாக்கீர் என்பவரின் மைத்துனருமாவார்.

இந்த விபத்தில் மொத்தமாக நால்வர் மரணமடைந்துள்ளனர்.

Comments