நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கான தபால் செலவுகளுக்குரிய ஒதுக்கீடு அதிகரிப்பு

🕔 February 17, 2019

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் செலவுகளுக்கான வருடாந்த ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடமொன்றுக்கான இலவச தபால் செலவுகளுக்கான ஒதுக்கீடு  175,000 ரூபாவிலிருந்து 350,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாகாண சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் செலவுகளுக்கான ஒதுக்கீடு, 24,000 ரூபாவிலிருந்து 48,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

குறித்த திருத்தம் 18 ஜனவரி 2018ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments