இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்; உறுதிப்படுத்தினார் தந்தை டி. ராஜேந்தர்

🕔 February 16, 2019

ந்திய தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி. ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.

குறளரசனுக்கு ‘கலிமா’ சொல்லிக் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது.

அந்த வீடியோவில் குறளரசன், அவரின் தந்தை டி. ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் இஸ்லாமிய மத பெரியோர்கள் சொல்லிக் கொடுக்கும் கலிமாவை உச்சரிக்கின்றார்.

இந்த நிலையில், குறளரசன் இஸ்லாத்தை தழுவியதை, இந்தியாவின் ‘விகடன்’ சஞ்சிகையிடம் அவரின்  தந்தை ராஜேந்தர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“குறளரசனுக்கு சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது நாட்டம் இருந்தது. தற்போது, இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அண்ணா சாலையிலுள்ள மக்கா மசூதி ஜமாத்தார் முன்னிலையில், குறள் – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்” என்று, டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ராஜேந்தர் மேலும் கூறுகையில்;

“குறளரசனின் விருப்பத்துக்கேற்ற பெயர் ஒன்றை வைத்துக்கொள்ளுமாறு இஸ்லாமிய மார்க்கப் பெரியார்கள் கூறியுள்ளனர்.

நானும் அனைத்து மதத்துக்கும் பொதுவானவன்” என்றும், தெரிவித்திருக்கிறார்.

சிம்பு என்கிற நடிகர் சிலம்பரசனின் சகோதரரான குறளரசன், இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments