உலகில் ஊழல் நிலவும் நாடுகள்; 89ஆவது இடத்தில் இலங்கை: கடைசியில் சோமாலியா

🕔 January 30, 2019

லகில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் 2018ஆம் ஆண்டு இலங்கை 89ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்ரநஷனல் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டிலும் இலங்கை இதே இடத்தைப் பிடித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கணக்கெடுப்பின்படி ஆசிய நாடுகளில் ஊழல் நிலவும் நாடுகளில் மூன்றாவது இடத்துக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஊழலில் இருந்து விடுபடுவதற்கான முன்னேற்றங்கள் இலங்கையில் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதேவேளை, உலகில் மிகவும் ஊழல் மிகுந்த நாடு எனும் 180ஆவது கடைசி இடத்துக்கு சோமாலியா தள்ளப்பட்டுள்ளது.

உலகில் ஊழல் மிகவும் குறைந்த நாடுகள் எனும் வரிசையில் டென்மார்க் 01ஆவது இடத்தையும், நிவ்சிலான்ட்  02ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்