மாவனெல்லை நகரிலுள்ள வர்த்தகக் கட்டடங்களில் தீ; காரணம் குறித்து பொலிஸார் விசாரணை

🕔 January 26, 2019

மாவனெல்லை நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தகக் கட்டடங்களில், இன்று சனிக்கிழம காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மாவனல்ல பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இத்த தீ விபத்தால், எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் ஆனால், பாரிய பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் சேத விவரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

மேற்படி விபத்துக்கான காரணம் குறித்து, மாவனல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments