வாய்ப்பை நழுவ விட்டார்கள்; தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறித்து நாமல் விமர்சனம்

🕔 January 23, 2019

திர்கட்சியின் கடமையை தமிழ் கூட்டமைப்பு சரியாக நிறைவேற்றியிருந்தால், அவர்களின் கோரிக்கைகளுக்கு இன்று தெற்கு செவி சாய்த்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை விஜேராமயில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட அவர் இதனைக் கூறினார்.

மேலும் தெரிவிக்கையில்;

“தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாட்டின் பொறுப்புவாய்ந்த எதிர்கட்சிப் பதவி வழங்கப்பட்டிருந்தது. நாட்டில் அனைத்து மக்கள் மீதும் தாக்கம் செலுத்தும் பல்வேறு பிரச்சினைகள் வந்த போதெல்லாம், மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய எதிர்கட்சிப் பொறுப்பை சுமந்த தமிழ் கூட்டமைப்பு, ரனில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் பாதுகாக்கும் நடைமுறையையே பின்பற்றியது.

தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பை சரிவர அவர்கள் பயன் படுத்தியிருந்தால், வடக்கில் மாத்திரம் அல்ல; முழு நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் மனங்களையும் அவர்களால் வென்றிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை.

இன்று புதிய அரசியலமைப்புக்கு தெற்கின் ஆதரவை கோரும் அவர்கள், அன்று கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்