பாலமுனை அல் ஹிக்மாவில், போதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வு

🕔 January 22, 2019

போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்’ எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு, பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி  நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அதிபர்  எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமை தாங்கினார்.

இதில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற சமூக சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். இக்ராம், பிரதி அதிபர் பி. முஹாஜிரீன், ராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைவஸ்து பாவனையின் தீமை குறித்து விளக்கமளித்தனர்.

நாடு பூராகவுமுள்ள பாடசாலைகளில், இந்த வாரம் முழுவதும் போதைப் பொருள் தடுப்பு நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்