வாழ்வாதார உதவிகளை, கொழும்பில் றிசாட் வழங்கி வைத்தார்

🕔 January 13, 2019

– அஷ்ரப் ஏ சமத் –

கொழும்பு வடக்கு பிரதேசத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.

இதற்கமைய மேல்மாகாண  சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்ட மட்டக்குழி கதிரவன் வீதியை அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார்.

அத்துடன் கொழும்பு வடக்கு பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழுள்ள 150 குடும்பங்களுக்கு சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்துக்கான 50 லட்சம் ரூபா  பெறுமதியான உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் ராஜாங்க அமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பிரதியமைச்சா் அப்துல்லாஹ் மஹ்ருப், நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபு ரஹ்மான், கலாநிதி எஸ்.எம்.ஏ. இஸ்மாயில் மற்றும் சீமந்து கூட்டுத்தாபனத்தின் தலைவா் றியாஸ் ஸாலி, மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்